Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறுவடைக் காலத்தில் மழை…. 500 மூட்டை நெல் நாசம்…. சோகத்தில் விவசாயிகள்….!!

கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள 500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியது.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையோரங்களில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயத்திற்க்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Categories

Tech |