Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சை செய்தும் சரியா தெரியல” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருமாண்டபதி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரனுக்கு கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சந்திரனுக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |