அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும் பெருமாள் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனால் சசிகலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் குணமடைந்து வந்த நிலையில் திடீரென சசிகலா மருத்துவமனையியே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் சசிகலா இறந்துள்ளார் என கருதி மருத்துவமனை நிர்வாகத்திடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி, பிரேத பரிசோதனைக்கு பின்னர் சசிகலா இறந்ததற்கு என்ன காரணம் என கண்டறிந்து பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிதுள்ளனர். அதன் பின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.