சினிமாவில் அழகாக இருந்தா தான் பட வாய்ப்புகள் வரும் என்பதற்காக கதாநாயகிகள் சிலர் அறுவை சிகிச்சை செய்து புதிப்பொலிவை காட்டி வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே அழகிற்காக அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தமிழில் ஜீவா உடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வந்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ராசி இல்லாத நடிகை என விமர்சனங்களும் கிளம்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பூஜா ஹெக்டே மூக்கு அழகாக இல்லை என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இதனால் மூக்கு அழகாக இல்லை என்று பலரும் கூறியதால் அறுவை சிகிச்சை மூலமாக அதை சரி செய்ய பூஜா ஹெக்டே முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.