Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறைக்குள் சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அறைக்கு சென்ற மஞ்சு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மஞ்சு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |