அவரின் அற்புத தொடர் திறமையே அவரை நடிகர் ஆக்கியது என்று அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மரணம் பற்றிய அறிந்து வேதனை அடைகிறேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச் சிறந்த நடிகர் ஆக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.