Categories
மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 21 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு….!!!

மதுரை அலங்காநல்லூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் முதல் முறையாக 1020 காளைகள் களமிறங்கின. அதில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கார் சாவியை கார்த்திக்கிடம் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இதையடுத்து 19 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் ராம்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 13 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |