Categories
மாநில செய்திகள்

அலங்கார ஊா்தி மேலும் ஒரு வாரம் காட்சி….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பாக 3 அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் அந்த 3 அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் அந்த அலங்கார ஊா்திகள் பொதுமக்கள் பாா்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை மெரினாவில் குடியரசு தின அலங்கார ஊர்தி இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |