மும்பையில் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் சிறுவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அண்டாப் ஹில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயை பழுதுபார்க்கும் பணிக்காக குழி தோண்டி அதில் நீரை நிரப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் அந்த குழியில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், அவர்களது பிள்ளைகள் அந்த பகுதிக்கு எவ்வாறு சென்றனர் என்பது பற்றி தெரியாது என கூறினர்.
மேலும் போலீசார் வந்து கூறிய பிறகு அவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் உயிரிழந்த விஷயம் தெரிய வந்ததாகவும் கூறினார். மேலும் சீரமைப்பு பணி முடிந்த பிறகு குழியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடாதே உயிரிழப்பிற்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் குடிநீர் குழாய் தோண்டி சீரமைப்பு பணி நடைபெற்றதால் அந்த குழியில் நீர் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், மேலும் சிறுவர்கள் அதில் தவறுதலாக விழுந்தனரா அல்லது யாரேனும் அவர்களை தள்ளிவிட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர். மேலும் சீரமைக்கும் பணி முடிந்தவுடன் குழியை மூடத சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.