Categories
மாநில செய்திகள்

அலட்சியமாக இருக்காதீர்கள்…. உயிருக்கே ஆபத்து ஏற்படும்…. காவல்துறை எச்சரிக்கை…!!!!

மதுரை யானைகல் தரைப் பாலத்தின் கீழ் வைகை ஆற்று வெள்ளப் பெருக்கில் எச்சரிக்கையை மீறி வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக உபரிநீர் வைகை ஆற்றுக்கு வர தொடங்கியுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைகல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது.

தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனத்தில் செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சில வாகன ஓட்டிகள் அலட்சியமாக வாகனத்தை ஒட்டி செல்கின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |