Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அலட்சியம் தான் காரணம்” குழந்தையின் உடலுடன் போராடிய உறவினர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

இறந்த குழந்தையின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காரைமேடு கிராமத்தில் கூலித் தொழிலாளியான மணிகண்டன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனீபா(26) என்ற மனைவி உள்ளார். கடந்த 9ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான பிரனீபாவை மணிகண்டன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் ஊழியர்கள் 2 நாட்களுக்குள் சுகப்பிரசவம் ஆகும் என்று கூறி பிரனீபாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று முன்தினம் திடீரென இளம்பெண்ணுக்கு தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பெண் மருத்துவர் ஒருவர் பிரனீபாவை பரிசோதித்து பார்த்து ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை திரும்பியுள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்த போது குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் பயிற்சி செவிலியர்களின் அலட்சியம் மற்றும் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உடலுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த மயிலாடுதுறை உதவி ஆட்சியர் பாலாஜி, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |