Categories
தேசிய செய்திகள்

அலர்ட் மக்களே…! கடைசி தேதி நெருங்கிருச்சி…. SBI முக்கிய அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஆகும்.  தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் ஆதாருடன் பான் கார்டு  இணைக்க வேண்டியது கட்டாயம்.

மேலும்  இணைக்காவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதன்பின் பான் கார்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தடையில்லா வங்கி சேவைகளை அனுபவிக்கவும், அசவுகரியத்தை தவிர்க்கவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைனிலேயே ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கலாம் .

 

Categories

Tech |