காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே மத்திய கிழக்கு வங்க கடலில் நேற்று முன் தினம் ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. அந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த காற்றழுத்த தாழ் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறிப்பாக எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழையை கொடுக்கும் என்றால் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையோரத்தை நோக்கி தான் செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் அந்த பகுதியில் அதிகமாக இருக்கும்.. இது இல்லாமல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மட்டும் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது..
மேலும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.