Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அலறல் சத்தம் கேட்கவில்லை” தலைமுடி சிக்கியதால் இறந்த பெண்…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்….!!

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியதால் பாதயாத்திரையாகச் சென்ற பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரை சந்தை கிராமத்தில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்நிலையில் திவ்யா இந்த ஆண்டும் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அவரோடு குழந்தைகளான முத்தரசன், கனிமொழி ஆகியோரும் சென்றுள்ளனர். பக்தர்கள் அனைவரும் திட்டக்குடி வழியாக சமயபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் சரக்கு வாகனத்தில் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரித்து அதற்கு ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு எழுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது உடல் அசதியிதால் திவ்யா தனது மகள் கனிமொழியை தூக்கிக்கொண்டு சுவாமியை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திவ்யாவின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாக இருந்ததால் திவ்யாவின் அலறல் சத்தம் டிரைவரின் காதுகளில் விழவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு தான் திவ்யா படுகாயங்களுடன் கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ரங்கன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |