சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.