14 வயது சிறுமியை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான பழங்குடியின மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அச்சிறுமி தனது ஆண்நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருக்கையில் அப்போது அங்கு வந்த நான்கு பேர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதை தடுக்க முயன்ற ஆண் நண்பரை 4 பேர் தாக்கிவிட்டு, சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பித்து ஓடிவிட்டனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.