தந்தையின் 2-வது மனைவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியபுதூரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணன் தனது 2-வது மனைவியான நிர்மலா என்பவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முதல் மனைவியின் மகனான சந்தோஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை நிர்மலா தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த கத்தியால் தனது சித்தி நிர்மலாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிர்மலாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து நிர்மலா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.