சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 13 வயது சிறுமி தனது தாயாருடன் பயணித்துள்ளார். இந்த ரயில் சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அச்சத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதனை அடுத்து சகபயணிகள் பார்த்திபனை பிடித்து ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.