Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நிர்வாணமாக நின்ற வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை அடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளை அகற்றி பாலன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் தூக்கத்திலிருந்து கண்விழித்த சிறுமி பாலனை கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் சிறுமியின் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது சித்தி சிறுமி ஆடைகள் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் நிர்வாணமாக நின்ற பாலனை குடும்பத்தினர் சுற்றி வளைத்து பிடித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலனை கைது செய்தனர்.

Categories

Tech |