Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட புதுப்பெண்…. காதல் கணவருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் சோகம்…!!

மனைவி கண்முன்னே வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை காந்திநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுமண தம்பதி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது பிரசாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய பிரசாந்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |