பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு உமாராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது உமாராணியை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உமாராணி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையத்தில் வசிக்கும் பூபதி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.