நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு பகுதியில் நாககுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் நாககுமாரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது நாககுமாரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த அபிராக் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.