Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த டேங்க் ஆபரேட்டர்…. எரித்து கொல்ல முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர்.

அதனை அகற்ற கூறி சிவசங்கர் கூறியபோது அவருக்கும், சஞ்சீவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இரவு 11 மணிக்கு உடலில் தீக்காயங்களுடன் சிவசங்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிவசங்கரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தர்மபுரியில் மகிலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிவசங்கரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது சங்கர் கூறியதாவது, சஞ்சீவி அவரது மகள் லட்சுமி பிரியாவுடன்(32) இணைந்து தூங்கிக் கொண்டிருந்த தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சிவசங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து சஞ்சீவி மற்றும் அவரது மகாலட்சுமி பிரியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |