டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்வா என்பவர் ஆபாச வெப்சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆபாச படத்தை பார்ப்பது சட்ட விரோதமானது நீங்கள் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கணினியின் திரையில் எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதில் அபராதம் செலுத்துவதற்கான யுக்தியை பேமெண்ட் மட்டும் qr குறியீடு விவரங்களும் வந்துள்ளன. இதனைப் பார்த்த விஸ்வா லேசாக சந்தேகம் அடைந்து அந்த இணைய முகவரியை சரிபார்த்து அது போலி என்பதை கண்டுபிடித்தார்.
இது போன்ற அனுபவம் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்டதால் அவர்கள் கூட்டாக சேர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஒரு சைபர் கிரிமினல் கும்பலின் வேலை இது என்பதை கண்டறிந்தனர்.கடந்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பலரிடமிருந்து ஏராளமான பணத்தை இந்த கும்பல் கொள்ளை அடித்தது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற போலியான எச்சரிக்கைகளிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.