ட்விட்டரில் தனிப்பட்ட நபர்களின் போட்டோ மற்றும் வீடியோ பதிவிடும் போது சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி அவசியம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ட்விட்டரை பயன்படுத்துவர்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.டுட்டர் திருவோணத்தில் இந்த அறிவிப்பால் இனி தனிப்பட்ட யாருடைய புகைப்படம் அல்லது வீடியோ வை போட முடியாது. அதை பயன்படுத்தி டுவிட் போட முடியாது.
அப்படி போட்டால் அது நீக்கப்படும் அபாயம் உள்ளது. புகைப்படம், வீடியோ தவிர தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்டவற்றையும் அனுமதி இல்லாமல் பகிர ட்விட்டர் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி யாரேனும் பதிவு போட்டால் அது உடனடியாக நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஊடகங்கள் மற்றும் பொது நலனுக்காக பகிரப்படும் புகைப்படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.