Categories
அரசியல் மாநில செய்திகள்

“அலாவுதீனின் அற்புத விளக்கா”… அதிமுகவை சரமாரியாக விமர்சித்த ப. சிதம்பரம்…!!!

ஆட்சி முடியும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ என அதிமுக அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளாக சரிந்து, இந்த ஆண்டில் 7.5% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் பாதாளத்தில் பொருளாதாரம் உள்ளது எனக்கு கூட தெரியாமல் மத்திய அரசு உள்ளது என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஆட்சி முடியும் தருவாயில் இப்போது 1100 என்ற எண்ணின் அழைத்தால் குறை தீர்ப்பார்களாம். குறுகிய காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ, தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா, இது அலாவுதீனின் அற்புத விளக்கா” என்று அதிமுக அரசை விமர்சித்து உள்ளார்.

Categories

Tech |