Categories
அரசியல்

‘அலுச்சாட்டியம் பண்றாங்க…. கொஞ்சம் சொல்லி வைங்களே’….! முதல்வரிடம் கம்பிளைன்ட் பண்ண ஓபிஎஸ்….!!!

போலீஸ் துறையினரையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் ஊழல் அதிகரித்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள எஸ்ஐ சீனிவாசன் தனது ஆடியோ பதிவில் ஏலச்சீட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது மற்றும் மணல் கடத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எஃப் ஐ ஆர் பதிவு செய்யக்கூடாது என திமுகவினர் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். இது மிகவும் மோசமான ஒரு சம்பவம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் நிம்மதியின்மை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது திமுகவின் ஆட்சி எவ்வாறு இருக்கிறது என்பதை காட்டும் ஒரு சிறிய சம்பவம் எனக்கூறினார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென பேசிய அவர்இந்த சம்பவமே திமுக ஆட்சிக்கு சான்று எனக் கூறினார். திமுக ஆட்சி முழுவதும் தீய சக்திகளை அராஜகம் செய்து வருவதாகவும் கடந்த 8 மாதங்களாக போலீசாரையும் அதிகாரிகளையும் திமுகவினர் மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் இசை சீனிவாசனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |