தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டி அம்பேத்கர் புகைப்படம் மாட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவகத்தில் சிலர் டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை மாட்ட முயன்றனர். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி புகைப்படம் மாட்டக்கூடாது என கூறினார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி அம்பேத்கர் புகைப்படத்தை மாட்டி மாலை அணிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தனி தாசில்தார் கணேசன் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து அலுவலக ஊழியர்களை மிரட்டிய எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த நாசர், அழகு, ஜான், பிரான்சிஸ் எபிநேசன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.