திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சுந்தரபாண்டியன் என்பவர் பணியாற்றி வருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாத வேலைக்கு சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் சம்பளம் பெறுவதற்காக எச்.டி.எப்.சி வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
இதனால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து சுந்தர பாண்டியன் மனைவி சங்கீதாவிடம் வங்கி சார்பில் ரூ.70 லட்சத்துக்கான காசோலை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதில் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.