கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் இருக்கும் புதர்களை அகற்றி, தேவையின்றி கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினார்.
இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது, பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனையடுத்து அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகள் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.