இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் குளிர்ச்சியையும், வலிமையையும் தருகிறது. மேலும் வயிற்றுக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவற்றை பாதிக்கிறது.
சாதம் வடித்து அந்த கஞ்சி தண்ணீர் சூடாக இருக்கும் போது சிறிது உப்பை போட்டு குடித்தால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். கஞ்சி ஆறிய பிறகு குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும்போது அந்த நீரை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பு நீங்கும்.
சுட சுட சாதம் சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும். குளிர்ச்சியாக இருக்கும் போது சாப்பிட்டால் கீல்வாதம், மூட்டுவலி ஏற்படும். மிதமான சூட்டில் சாதம் இருக்கும்போது பசும்பாலை ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படும். முக்கியமாக நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பு இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.