சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் அன்றாட சுற்றி வருகின்றது. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்றுவட்ட பாதை ஒரு சரியான வட்டப்பாதையாக இல்லாமல், நீள் வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி ஒரு வருடத்தில் சூரியனிலிருந்து அதன் தொலைதூர நிலைக்குச் செல்லும். அது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என அழைக்கப்படும்.
அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி மற்றும் பெரிஹெலியன் ஜனவரி 2ம் தேதி தொடங்கும். இந்நிலையில் இந்த ஆண்டு சூரியனிலிருந்து பூமி மிகத் தொலைதூரப் புள்ளியான அல்பெலியன் நிலையை நாளை அடைகின்றது. இது வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி முடிவடையும் . அல்பெலியன் நிகழ்வு நாளை காலை 5.27 மணிக்கு தொடங்க உள்ளது. அதன்படி நாளை முதல் பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஒன்பது கோடி கிலோமீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு காலத்தில் 15 கோடி தூரமாக இருக்கும். சுமார் 66% சாதாரண தூரத்தை விட தூரத்தின் அளவு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.