Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்த சஞ்சய்”… கவலையடைந்த விஜய்…!!!

விஜயின் மகனான சஞ்சய், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்-க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சய் சினிமா சம்பந்தமான படிப்பை கனடாவில் முடித்துள்ளார். அடுத்த கட்டமாக சினிமாவில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனராக அல்லது நடிகராக அறிமுகமாகுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது தொகுப்பாளராக இருந்த நெல்சன் விஜய்யிடம் குடும்பம் பற்றிய சில கேள்விகளை எழுப்பி குறிப்பாக மகன் சஞ்சய் குறித்து அவரிடம் கேட்டார். அந்த கேள்வியானது சஞ்சய்  அடுத்ததாக என்ன செய்ய போகிறார்? சினிமாவில் அவருக்கு ஆர்வம் இருக்கின்றதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விஜய் அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. நான் அவரை வற்புறுத்த மாட்டேன். அவருக்கு எதில் விருப்பமோ அதை அவர் செய்யட்டும். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒருமுறை எனது வீட்டுக்கு வந்து கதையை சொல்ல வேண்டும் என கூறினார். நானும் சொல்லுங்கள் என்றேன். அதன்பிறகு அவர் மகனிடம் கதை சொல்ல வேண்டும் என கூறினார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வான் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் எனவும் இரண்டு வருஷம் டைம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். நானும் இதற்கு ஓகே சொல்லிவிட்டேன். சஞ்சய் கேமராவுக்கு முன்னாடி வேலை செய்யப் போகிறாரா அல்லது கேமராவுக்கு பின்னாடி வேலை செய்ய போறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |