நடிகை சனா கான் தனது திடீர் திருமணத்திற்கான விளக்கத்தை திருமண புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை சனாகான் சிம்புவின் ‘சிலம்பாட்டம் ‘ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஆயிரம் விளக்கு, தம்பிக்கு இந்த ஊரு, ஈ ,பயணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சனா கான் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமானார். சமீபத்தில் இவர் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும் என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க மனித குலத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் சூரத்தை சேர்ந்த முப்தி அனாஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சனாகான் தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திடீர் திருமணத்திற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.அதில் அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் காதலித்தோம். அல்லாஹ்வுக்காக திருமணம் செய்து கொண்டுள்ளோம். அல்லாஹ் எங்களை இந்த வாழ்க்கையில் ஒன்றாக வைத்திருந்து மறுமையிலும் ஒன்று சேர்க்கட்டும் என பதிவிட்டுள்ளார்.