Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் செய்த டக்கரான சாதனை… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அலவைகுண்ட புரம்லோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும்  ஹாரிகா ஹசின் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த பாடல் யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் புட்ட பொம்மா வீடியோ பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக புதிய சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |