புஷ்பா படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
The Dubbing formalities of #PushpaTheRise in full swing 🔥#PushpaRaj will thrill you on screens with his language and body language 😎#ThaggedheLe 🤙#PushpaTheRiseOnDec17@alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @Dhananjayaka @Mee_Sunil @ThisIsDSP @MythriOfficial pic.twitter.com/kHD7PAIBiR
— Aditya Music (@adityamusic) November 21, 2021
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் டப்பிங் பணிகளில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளது.