Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் சமந்தா?… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

Samantha: Pukka News has arrived .. Samantha special song in `Pushpa` ..  Poonakale for fans | Samantha Special Song in Allu Arjun Pushpa Movie |  pipanews.com

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த பாடலுக்கு கவர்ச்சி நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.

Categories

Tech |