அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
மேலும் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான புஷ்பா படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புஷ்பா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.