அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்திற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வன அதிகாரியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் .
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் வில்லன்களுக்கு தலைவராக ஆர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ஆர்யா, அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் ஆர்யா ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.