நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் பிரபல மலையாள நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ பஹத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.