உலகின் ஆபத்தான உயிரினம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
உலகத்தில் மிகவும் ஆபத்தான உயிரினம் என்று நம்மிடம் கேட்டால் முதலில் நியாபகத்தில் வருவது பாம்பு, சிங்கம், புலி போன்ற விலங்குகள் தான். ஆனால் இதெல்லாம் ஆபத்தான உயிரினம் என்றாலும், இதை விட ஆபத்தான உயிரினம் உலகத்தில் உள்ளது. அது என்ன என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு ஆகும். ஒரு கொசு கடிப்பதினால் வருடத்திற்கு உலகம் முழுவதும் 10,00,000 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இந்த கொசுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகளும், தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொசுக்களை மனிதர்களால் அழிக்க முடியவில்லை. இந்த கொசு கடிப்பதினால் உலகம் முழுவதும் 1 வருடத்திற்கு சுமார் 20 கோடி மக்கள் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஏடஸ் என்ற கொசு கடிப்பதினால் ஒரு வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் மக்கள் உயிரிழக்கின்றனர்.
உலகத்தில் உள்ள அனைத்து வகையான கொசுக்களும் ஆபத்தானவையா என கேட்டால் அதற்கு அறிஞர்கள் கூறும் பதில் இல்லை என்பதுதான். அதாவது இந்த உலகத்தில் சுமார் 3,500 வகையான கொசுக்கள் உயிர் வாழ்கின்றனது. பெண் கொசுக்கள் குட்டை, பூந்தோட்டம், நீர்த்தேக்கம், மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உள்ள தண்ணீரில் முட்டை இடுகிறது. இந்த முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் அந்த நீரில் இருக்கும் பாசிகள் மற்றும் நுண்ணுயிர்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. இந்த லார்வாக்கள் கொசுக்களாக வளர்ந்த பிறகு அவற்றில் பெரும்பாலானவை சைவ கொசுக்களாகவே இருக்கின்றனது.
இந்த வகை கொசுக்கள் பூவிலுள்ள தேன் மற்றும், தண்டின் சாறு போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனது. இந்த கொசு வகைகளில் யானை கொசு என்ற ஒரு வகை உள்ளது. இது மற்ற கொசுக்களை விட உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும். இந்த வகை கொசுக்கள் ரத்தம் குடிப்பது இல்லை. அதற்கு மாறாக கொசுக்களின் லார்வாக்களை உணவாக உட்கொள்கிறது. இதன் மூலமாக மனிதர்களிடையே நோய் பரப்பும் பல வகையான கொசுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்த யானை கொசுக்கள் மனிதர்களுக்கு நன்மை மட்டுமே அளிக்கிறது. மேலும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கொசு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.