Categories
தேசிய செய்திகள்

அளவுக்கதிகமான கடன்…. வர்த்தகத்தில் ஏற்பட்ட திடீர் நஷ்டம்…. பேராசிரியர் எடுத்த முடிவு…!!!

தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்க சாமி. பேராசிரியரான இவர் கிரிப்டோ கரன்ஸியில் அதிகளவில் முதலீடு செய்து வந்துள்ளார். இதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடை விதித்து நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளது. இந்த தகவல் வெளிவந்ததையடுத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டதால் ராமலிங்க சாமிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவருக்குப் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  ராமலிங்க சாமி கடந்த 22ஆம் தேதி விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |