Categories
உலக செய்திகள்

“அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்”….. சிறுவனின் பிறப்புறுப்பில் சிக்கிய…. யுஎஸ்பி கேபிள்….!!

இங்கிலாந்து நாட்டில் லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த  பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தனது பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கின்றது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து  அளந்து பார்த்துள்ளான். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தம் வரத் தொடங்கியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கின்றார். அப்பொழுது மருத்துவமனையில் அறையிலிருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கின்றார்.

யுஎஸ்பி கேபிள் இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டு கொண்டு இருப்பதும், ஏகப்பட்ட முடிச்சு போடப்பட்டு இருந்ததால் உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்றுவது கடினமான வேலையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலமே அதை வெளியே எடுக்கப்பட்டது. அப்போது தான் தெரியவந்தது அவனது ஆண் குறிக்குள் 70 செ.மீ அளவு கேபிள் உள்ளே  இருந்தது. இதனை அடுத்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Categories

Tech |