Categories
உலகசெய்திகள்

அழகான இளம்பெண்….. சைக்கோவாக மாறி தாயை கொன்ற கொடூரம்…. என்ன காரணம் தெரியுமா?….!!!

ஒரு அழகான பெண் சைக்கோவாக மாறி தனது சொந்த தாயை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இசபெல்லா என்ற பெண் தன்னுடைய தாய் தந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென ஒருநாள் இசபெல்லா வின் தாயும் தந்தையும் பயங்கரமாகச் சண்டை போட்டுள்ளனர். அதன்பிறகு சிறிது நாட்களில் இசபெல்லாவின் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து ஆன சிறிது நாட்களிலேயே இசபெல்லாவின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக இசபெல்லாவுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே கடுமையான பிரச்சினைகள் நடந்துள்ளது. ஆனால் இசபெல்லாவின் தாயார் அதை எதுவுமே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இசபெல்லா தன்னுடைய தாயை 150 முறை கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இசபெல்லாவின் 2-வது தந்தை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய தாயை கொலை செய்து விட்டு இசபெல்லா எதுவுமே நடக்காதது போன்று சாதாரணமாக இருந்துள்ளார். மேலும் ஒரு அழகான பெண் சைக்கோவாக மாறி பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |