Categories
உலக செய்திகள்

அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன?.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..!!

திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் பணம் நகை போன்றவற்றை கொடுப்பதை வழக்கம்.

ஆனால் Iwan-னின் வரதட்சனை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதுகுறித்து Helmi கூறுகையில் “விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் எனது கணவர் சிரமங்களை சந்திக்கக்கூடும் என்பதால்தான் நான் அதனை விரும்பவில்லை. எனவே இந்த யோசனையை அவருக்கு கொடுத்தேன். அதே நேரம் எனது பெற்றோர் 2,771 டாலர் வரதட்சணையாக அவரிடமிருந்து எதிர்பார்த்தனர். எனக்கு கிடைத்த இந்த செருப்பை நான் பத்திரப்படுத்தி வைத்து எனது குழந்தைகளுக்கு காட்ட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |