Categories
தேசிய செய்திகள்

அழகான வீடு ஆற்றில் சரிந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… கேரள மழையால் தொடரும் துயரம்…!!!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒருவீடு ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் 2 மாடி வீடு குடியிருப்பவர்கள் கண்முன்னே ஆற்றோடு அடித்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டகாயம் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிமலை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய வீட்டின் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த வீடு அப்படியே பின்புறம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் குடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 18 பேர் உயிரிழந்ததாகவும் பலர் மண்ணில் புதைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கேரளாவில் கனமழை, நிலச்சரிவின் தாக்கம் மற்றும் நிலைமையை மாநில முதலமைச்சர் பினராய் விஜயனிடம் கேட்டறிந்தேன். காயம் அடைந்தவர்கள் மற்றும் துயரம் அடைந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் தயாராக உள்ளனர். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Categories

Tech |