Categories
சினிமா தமிழ் சினிமா

‘அழகிய கண்ணே’… பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா…!!!

அழகிய கண்ணே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் அழகிய கண்ணே. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஜய் டிவி பிரபலம் அண்ட்ரூஸ், பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய குமார் இயக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் அழகிய கண்ணே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரிலிருந்து அழகிய கண்ணே படம் காதலை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிகிறது. தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |