நான்கு பெண்கள் சேர்ந்து இந்தியாவை சேர்ந்த ஒருவரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்களின் புகைப்படங்களை இணைக்கப்பட்டு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் மூலம் பாடி மசாஜ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும் ஆபரில் ஒரு செஷனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 3,950 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட 33 வயது இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தில் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த இளைஞர் இந்தியாவை சேர்ந்தவர். இளைஞரிடம் பேசிய பெண்கள் துபாயில் உள்ள Al Refaa என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு கூறியிருக்கின்றனர்.
அந்த இளைஞரும் குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது நான்கு ஆப்பிரிக்க பெண்மணிகள் சேர்ந்து அந்த இளைஞனின் செல்போனில் உள்ள வங்கியின் கணக்கை திறக்குமாறு கூறியுள்ளன. அதற்கு அவர் மறுக்கவே அந்த பெண்கள் அந்த இளைஞனின் கழுத்தில் கத்தியை வைத்து அவனை அடித்து உதைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளார். மற்றொரு பெண் அந்த இளைஞன் கிரெடிட் கார்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி அதிலிருந்து இந்திய மதிப்பில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 556 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார்.
அந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் அந்த வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். பின்னர் இந்திய மதிப்பு படி 49 லட்சத்து 38 ஆயிரத்து 819 லட்சம் பணத்தை அவரை மிரட்டி பல்வேறு வங்கிக்கு இடம் மாற்றியுள்ளனர். பின்னர் போனையும் அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து துரத்தி உள்ளனர் .தப்பித்து சென்று அந்த இளைஞன் தனது வங்கியை தொடர்பு கொண்டு தனது கணக்கில் இருக்கும் பணம் முறைகேடாக அனுப்பப்பட்டது என்று கூறியுள்ளார் பின்னர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
அந்த இளைஞன் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை ஏமாற்றிய 3 நைஜீரியா பெண்களையும் கைது செய்தனர். அதில் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். துபாயில் இருக்கும் இந்திய இளைஞர் ஏமாற்றப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது.