கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தங்கராஜின் வருமானம் குடும்பம் நடத்த போதாமல் இருந்த காரணத்தால் ருக்மணி பக்கத்திலுள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் தங்கராஜ்க்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. இந்நிலையில் வழக்கம்போல சம்பவத்தன்று சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டைக்கு பின்னர் ருக்மணி உறங்கச் சென்றுவிட்டார். இந்நிலையில் உறங்கிக்கொண்டிருந்த ருக்மணியின் அருகில் விடிய விடிய அருகிலேயே அமர்ந்த அவருடைய கணவர் திடீரென அருகில் உள்ள அம்மிக்கல்லை எடுத்து ருக்மணியின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து , ருக்மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தவறே செய்யாத ஒரு பத்தினிப் பெண் இப்படி உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.