அழகுக்கலை சிகிச்சையால் ரைஸா வில்சன் முகம் வீங்கிய சம்பவத்தில் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிக் பாக்ஸ் பிரபலம் ரைஸா வில்சன் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் அழகுக்கலை மருத்துவத்தால் தனக்கு முகம் வீங்கி விட்டது என்றும் அந்த மருத்துவர் தன்னை சந்திக்கவும், பேசவும் மறுப்பதாகவும் அவரின் உதவியாளர் அவர் வெளியூர் சென்றுவிட்டார் என கூறியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி செந்தில் மக்களுக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த சிகிச்சை எடுத்தால் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் என ரைஸா வில்சனிடம் கூறி ஒப்புதல் வாங்கிய பின்னரே சிகிச்சை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிகிச்சையை அவர் பலமுறை செய்திருக்கிறார் என்றும் இது போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பைரவி செந்தில் மருத்துவ அறிவுரைகளை பின்பற்றாததால் அவருக்கு இந்த முகவீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இந்த வீக்கம் ஆபத்தானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ரைஸா வில்சன் மருத்துவமனையின் பெயர் மற்றும் சமூக போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் எங்கள் மருத்துவமனையின் பெயர் கெட்டுவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மருத்துவமனைக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ரைஸா வில்சன் தான் முழு பொறுப்பு என்றும் அவர் தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மக்கள் இதுபோன்ற கருத்துக்களை எண்ணி பயப்படவேண்டாம் என்றும் நாங்கள் சிறந்த சேவையை அளித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.